#T20 WorldCup 2022: பாக்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி, டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங்! வெல்வது யார்?
டி-20 உலகக்கோப்பையில் முதல் அரையிறுதியில் பாக்.-நியூசிலாந்து மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகள் இன்று தொடங்குகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 28 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 17 போட்டிகளில் வென்றுள்ளது, டி-20 உலகக்கோப்பை தொடர்களில் 6 போட்டிகளில் 4இல் பாகிஸ்தான் அணியே வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
இதே சிட்னியில் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 104 ரன்களும், டெவான் கான்வே 92* ரன்களும், பாகிஸ்தானின் இஃப்திகார் அஹ்மது 82 ரன்களும் அடித்துள்ளனர். சிட்னியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குகின்றனர்.
இதில் வெற்றி பெறும் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான்(w), பாபர் அசாம்(c), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அப்ரிடி