#T20 WorldCup 2022: ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் எடுத்து அபாரம்! அயர்லாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்கு.!
டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் குவிப்பு.
ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அடிலெய்டில் விளையாடி வருகின்றன.
இரு அணிகளுக்கும் இது சூப்பர்-12இல் கடைசி போட்டி, மேலும் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கும். அயர்லாந்து அணிக்கு இன்றைய போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் முடிவு மற்றும் ரன் ரேட் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, வில்லியம்சன்(61), பின் ஆலன்(32), டெவான் கான்வே(28), டேரில் மிட்சேல்(31) ரன்கள் அடிக்க 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்துள்ளது.
அயர்லாந்து சார்பில் ஜோசுவா லிட்டில் 19 ஆவது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அவர் 3 விக்கெட்களும், காரெத் டெலனி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.