#T20WorldCup:பங்களாதேஷ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா..!
13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து,பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,களமிறங்கிய பங்களாதேஷ் அணி இறுதியில்,18.2 ஓவரிலேயே 10 விக்கெட்டையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை ரபாடா,நார்ட்ஜே ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனையடுத்து,இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் இறங்கி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில்,ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்கள் எடுத்து எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,டி காக்கும் 16 ரன்களில் மகேதி ஹசனின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார் .அதன்பின்னர்,இறங்கிய ஐடன் மார்க்ராம் டக் அவுட் ஆகியும்,ராஸ்ஸி வான் டெர் டுசென் 22 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.
ஆனால்,பின்னர் களம் கண்ட கேப்டன் டெம்பா பவுமா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கை அழைத்து சென்றார். இறுதியில்,13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதில் தட்டி சென்றது.டெம்பா பவுமா 31*,டேவிட் மில்லர் 5*.
பங்களாதேஷ் அணியை பொறுத்த வரை தஸ்கின் அகமது அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.