#T20 World Cup: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி..!
பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கியது. இதனால், களமிறங்கிய சில வீரர்கள் மட்டும் ரன் எடுக்க மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இதன் காரணமாக நியூஸிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவூப் 4 விக்கெட்டை பறித்தார்.
135 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் பாபர் அசாம் 9 ரன் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய முகமது ஹபீஸ், ஃபக்கர் ஜமான் தலா 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் 33 ரன் எடுத்து 12 ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.
பிறகு களம் கண்ட ஆசிப் அலி, சாயிப் மாலிக் இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர். பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஆசிப் அலி 27*, சாயிப் மாலிக் 26* ரன் எடுத்து இருந்தனர்.