பிவிஆர் ஐநாக்ஸ்ஸில் டி20 உலகக்கோப்பை? திரைப்பட நஷ்டத்தை சரி செய்ய புதிய திட்டம் !!

PVR plans to project T20 Worldcup

சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சில முக்கிய போட்டிகளை மட்டும் பிவிஆர் ஐநாக்ஸ்ஸில் (PVR INOX) திரையிட திட்டம் தீட்டி வருவதாக தலைமை நிதி அதிகாரி நிதின் சூட் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்தில் டி20 உலககோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற உள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளும் தீவீரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய இந்தியாவின் மிகப்பெரிய சினிமா ஆபரேட்டரான பிவிஆர் ஐநாக்ஸ் தங்களது திரையில் நடைபெற இருக்கும் டி20 போட்டிகளின் முக்கிய போட்டிகளை மட்டும் நேரலையாக திரையிடுவதற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நிதின் சூட் பிஎன்என் ப்ளூம்பெர்க்கு (BNN Bloomberg) அளித்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக நிதின் சூட் கூறுவது என்னவென்றால், “இந்த 2024 காலாண்டில் மட்டும் எங்களுக்கு கிட்ட தட்ட ரூ.130 கோடி ($15.6 மில்லியன்) திரைப்படங்களால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இதை சரி கட்ட நாங்கள் கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், விளையாட்டுகள் என்று மாற்று நிகழ்வுகளால் எங்களது போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் 50 ஓவர் போட்டிகளை விட 20 ஓவர் போட்டிகளுக்கு ஈர்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

மேலும், ரசிகர்கள் மைதானத்தில் காணும் சூழலை திரையரங்கியிலும் காண முடியும் எனவும் ஒரு ஊடகமாக மக்களுக்குள் தொடர்புடையதாக இருப்பதே எங்களது மிகப்பெரிய கவனம்” என நிதின் சூட் பிஎன்என் ப்ளூம்பெர்க்கு அளித்த அந்த பேட்டியில் கூறி இருந்தார். மேலும், இந்திய அணியின் ரசிகர்களிடேயே இந்த டி20 கோப்பைக்கான வரவேற்ப்பும் அதிகமாக உள்ளது.

இதனால், அவர்கள் அமெரிக்காவில் நடைபெறும் இந்திய அணியின் போட்டிகளை காண அங்கு செல்வதற்கு பதிலாக திரையரங்குகளில் ரசிகர்களின் மத்தியில் குளிர்ந்த சூழலுடன் போட்டிகளை காணுவது அதே சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் நிதின் உள்ளார். எனவே, இந்திய அணியின் முக்கிய போட்டிகளை நேரலையாக பிவிஆரில் திரையிட போவது உறுதி ஆனால் ரசிகர்கள் மைதானத்தை நிரப்புவது போல திரையரங்கையும் நிரப்புவார்களா என்று பொறுத்து இருந்தே நாம் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்