இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அட்டவணையும் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது மூத்த வீரர்களுடன் களமிறங்குமா, அப்படி என்றால் கேப்டன் யார், துணை கேப்டன் யார் என பல்வேறு கேள்விகள் வளம் வந்துகொண்டே இருந்தது. இந்த சூழலில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை பொறுத்தே டி20 உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
CSK-வின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகை.? வெளியான சூப்பர் தகவல்….
இந்த நிலையில், ஐசிசியின் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது, வரும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும். ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்றாலும், மக்களின் இதயங்களை வென்றது. இதனால், இம்முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என நான் நம்புகிறேன்.
பின்னர் இந்திய அணி கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்து பேசியதாவது, அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிக்கும் ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டன். இதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும். அதேபோல், டி20 உலகக் கோப்பை தொடரின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் எனவும் அறிவித்தார். எனவே, கேப்டன் குறித்து பல்வேறு கேள்விகள் வளம் வந்த நிலையில், ரோஹித் தான் கேப்டன் என்று ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…