டி-20 உலகக் கோப்பை போட்டி;இந்தியா VS பாகிஸ்தான்…… 2 வீரர்களுக்கு மிக முக்கியப் பங்கு – கம்பீர் ஆலோசனை!

Default Image

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டியானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியானது,நவம்பர் 14 ஆம் தேதி  நிறைவடைகிறது.

இதன்காரணமாக,கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகளை இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டது.அதில்,2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

மேலும்,டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கம்பீரின் ஆலோசனை :

இந்நிலையில்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”இந்த போட்டியில் மூத்த வீரர்கள் மட்டுமே பொறுப்புகளை ஏற்று விளையாட வேண்டும்.மேலும், இளம் வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடுவதை உறுதி செய்யுங்கள். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருந்தாலும்,விளையாட்டின் நுட்பம் மிகவும் முக்கியமானது.

மிக முக்கியமான இரண்டு வீரர்கள்:

நான் முதலில் பாகிஸ்தானை எதிர்கொண்டபோது மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுமையுடனும் விளையாடியுள்ளனர்.அந்த வகையில்,விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். எனவே அவர்கள் இருவரும் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணி:

இரு பிரிவுகளிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் பிளேஆஃப்களுக்கு முன்னேறுகின்றன. இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒரே பிரிவில் உள்ளன, எனவே எந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்