டி20 உலகக்கோப்பை.., ஒரே குரூப்பில் இடம்பெற்ற இந்தியா – பாகிஸ்தான் ..!
டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. நவம்பர் 14 ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு ஏ அணிகள்:
இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர்.
குழு பி அணிகள்:
பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர்.
குரூப் 1 அணிகள்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளனர்.
குரூப் 2 அணிகள்:
இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.