அதிக சிக்ஸர்,அதிக ரன் யாரெல்லாம்? வாங்க டி20 உலகக்கோப்பை சாதனையை திரும்பி பார்ப்போம்!

t20 world cup records

சென்னை : டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2024)  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் 20 அணிகள் விளையாட இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் போட்டியை பார்க்க தான் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், இதுவரை டி20 உலகக்கோப்பை போட்டியில் யார் அதிகமான ரன்கள் அடித்து இருக்கிறார்கள், அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள், அதிக விக்கெட் எடுத்துள்ளார்கள் என்ற சாதனை பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிகம் ரன்கள் எடுத்த வீரர்கள்

  • விராட் கோலி (இந்தியா) – 1141
  • மஹேல ஜெயவர்தன (இலங்கை) – 1016
  • கிறிஸ் கெய்ல் (மேற்கிந்தியத் தீவு) – 965
  • ரோஹித் ஷர்மா (இந்தியா)- 963
  • திலகரத்ன டில்ஷான் (இலங்கை) -897

அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

  • கிறிஸ் கெய்ல் (மேற்கிந்தியத் தீவு)- 63 சிக்ஸர்கள்
  • ரோஹித் ஷர்மா (இந்தியா) – 35 சிக்ஸர்கள்
  • ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), யுவராஜ் சிங் (இந்தியா)- 33 சிக்ஸர்கள்
  • ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 31 சிக்ஸர்கள்

அதிக டி20 உலகைக்கோப்பை விளையாடிய வீரர்கள் 

  • ரோஹித் சர்மா (இந்தியா)- 39 போட்டிகள்
  • ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்) – 36 போட்டிகள்
  • திலகரத்ன தில்ஷான் (இலங்கை)- 35
  • டுவைன் பிராவோ (மே.தீ), ஷாகித் அப்ரிடி (பாக்), சோயப் மாலிக் (பாக்), டேவிட் வார்னர் (ஆஸ்) – 34 போட்டிகள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் 

  • ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்) – 47 விக்கெட்கள்
  • ஷாஹித் அப்ரிடி (பங்களாதேஷ்) – 39 விக்கெட்கள்
  • லசித் மலிங்கா (இலங்கை) – 38 விக்கெட்கள்
  • சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்)- 36 விக்கெட்கள்
  • அஜந்தா மெண்டிஸ் (இலங்கை), உமர் குல் (பாகிஸ்தான்) – 35 விக்கெட்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்

  • கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் சதம் விளாசினார்.
  • கிறிஸ் கெய்ல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் விளாசினார்.
  • பிரண்டன் மெக்கல்லம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் சதம் விளாசினார்.
  • ரிலீ ரோசோவ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 52 பந்துகளில் சதம் விளாசினார்.
  • அகமது ஷெஹ்சாத்  பங்களாதேஷ் அணிக்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசினார்.

விக்கெட் கீப்பரால் அதிக டிஸ்மிஸ்கள்

  • எம்.எஸ் தோனி (இந்தியா) 21 கேட்ச் – ஸ்டம்பிங்ஸ் 11- மொத்தம் 32
  • கம்ரன் அக்மல் (பாகிஸ்தான்) 12 கேட்ச் -18 ஸ்டம்பிங்ஸ் மொத்தம் = 30
  • தினேஷ் ராம்டின் ( மே. தீ) 18 கேட்ச் – 9 ஸ்டம்பிங்ஸ் மொத்தம் =27
  • குமார் சங்கக்கார ( இலங்கை) 12  கேட்ச் – 14 ஸ்டம்பிங்ஸ் மொத்தம் =26
  • குயின்டன் டி காக் (தென் ஆப்ரிக்கா) 17 கேட்ச் – 5 ஸ்டம்பிங்ஸ் =22

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்