#T20 World Cup 2022: அரையிறுதிக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான் அணி?
பாகிஸ்தான் அணி இந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
டி-20 உலகக்கோப்பையில் நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் தோல்வியுற்ற பிறகு பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இந்த டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு முதலில் பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 போட்டிகளிலும் மிகப்பெரிய ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டும். பாகிஸ்தான் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் இருக்கும், மற்ற அணிகள் 6 அல்லது அதற்கு கீழ் புள்ளிகளை பெறும் பட்சத்தில் ரன்ரேட் மிகப்பெரிய பங்கு வகிக்கும்.
இன்னொரு வகையில் சொல்லவேண்டுமானால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கையில் இருக்கிறது. இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும், மற்றும் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோற்க வேண்டும்.
இவையெல்லாம் நடந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதி பற்றி நினைத்து பார்க்கலாம்.