#T20 World Cup 2022: எந்தெந்த அணிகள் சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன.!

Default Image

ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேற்றம், ஜிம்பாப்வே சூப்பர்-12 க்கு தகுதி. 

ஆஸ்திரேலியாவில், எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக அந்த வருடம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அக்-16 இல் தொடங்கிய தகுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று அக்-21 வரை நடைபெற்று வந்தன. 8 அணிகளுடன் குரூப் A மற்றும் குரூப் B என ஆரம்பித்த இந்த தொடரில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்று சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் மற்றும் ரன் ரேட்டின் அடிப்படையில் குரூப் Aவில் இலங்கை 4 புள்ளிகள்(+0.667) மற்றும் நெதர்லாந்து 4 புள்ளிகள்(-0.162) பெற்றும், குரூப் Bவில் ஜிம்பாப்வே 4 புள்ளிகள்(+0.200) மற்றும் அயர்லாந்து 4 புள்ளிகள் (+0.105) பெற்று சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் வெளியேற்றம்:     டி-20 உலகக்கோப்பையில் இருமுறை சாம்பியன் வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை டி-20 உலகக்கோப்பை 2022 இல் அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல், முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சூப்பர்-12க்கு முன்னேறியது.

ஜிம்பாப்வே முதல்முறை:    ஜிம்பாப்வே அணி முதன்முறையாக டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்த சுற்று சூப்பர்-12 க்கு முன்னேறியுள்ளது. ஸ்காட்லாந்தை இன்று நடைபெற்ற கடைசி தகுதிச்சுற்று போட்டியில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி, சூப்பர்-12 க்கு முன்னேறி வரலாறு படைத்தது.

இதன் மூலம் குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இலங்கையும், அயர்லாந்தும் இணைகின்றன. மேலும் குரூப் 2இல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம் அணிகளுடன் ஜிம்பாப்வேவும், நெதர்லாந்தும் இணைகின்றன.

சூப்பர்-12 போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. நாளை சிட்னியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதே போல் பெர்த்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மெல்போர்னில் அக்-23 அன்று நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்