#T20 World Cup 2022: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்.! சூப்பர்-12க்கு தகுதி பெறுவது யார்.?
டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 11 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் Aவில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12க்கு முன்னேறியுள்ள்ள நிலையில் குரூப் B க்கான போட்டிகள் இன்று நடைபெறுகிறது.
இன்றுடன் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. இன்னும் குரூப் Bவில் எந்த 2 அணிகள் சூப்பர்-12க்கு இணையும் என்று முடிவாகவில்லை. இன்று நடைபெறும் போட்டிகளின் முடிவில் எந்த அணிகள் செல்லும் என்பது தெளிவாகிவிடும்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. இருமுறை டி-20 சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் இம்முறை சூப்பர்-12க்கு தகுதிபெற போராடிக்கொண்டிருக்கிறது.
பவர்பிளே முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் அடித்து விளையாடிக்கொண்டிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி: கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன் (c & w), ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (c), லோர்கன் டக்கர் (w), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், சிமி சிங், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்