#T20 World Cup 2022: வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளியேற்றிய அயர்லாந்து! சூப்பர்-12க்கும் தகுதி.!

Published by
Muthu Kumar

டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 11 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 62 ரன்கள் குவித்திருந்தார். அயர்லாந்து தரப்பில் கரேத் டெலானி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

147 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 17.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 45 ரன்களும் குவித்தனர்.

இதனால் அயர்லாந்து அணி விக்கெட் 9 வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை உலககோப்பையிலிருந்து  வெளியேற்றியது. குரூப் Bயில் அயர்லாந்து அணி சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

32 minutes ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

38 minutes ago

ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!

சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…

1 hour ago

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?

கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ்  ட்ரீ  வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார்  வைப்பது எதற்காக என்றும் இந்த…

1 hour ago

டிச.30 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…

2 hours ago

இனி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இல்லை? மத்திய அரசு திட்டவட்டம்!

டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…

2 hours ago