#T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் .!
ஐசிசி டி-20 உலககோப்பையின் 10 ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாளையுடன் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் குரூப் A வில் இலங்கை மட்டும் சூப்பர்-12க்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இன்று நடைபெறும் நமீபியா-யு.ஏ.இ போட்டியின் முடிவை பொறுத்தே குரூப் A வில், நெதர்லாந்து அல்லது நமீபியா அணி, இலங்கையுடன் சூப்பர்-12க்கு தகுதி பெரும்.
டாஸ் வென்ற யு.ஏ.இ அணி, முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
நமீபியா அணி: ஸ்டீபன் பார்ட், மைக்கேல் வான் லிங்கன், ஜான் நிகோல் லோஃப்டி-ஈட்டன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(C), ஜான் ஃப்ரைலின்க், ஜேஜே ஸ்மிட், டேவிட் வைஸ், ஜேன் கிரீன்(W), ரூபன் டிரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ
யு.ஏ.இ அணி: முஹம்மது வசீம், விருத்தியா அரவிந்த்(W), சுண்டங்காபோயில் ரிஸ்வான்(C), அலிஷான் ஷரபு, அயன் அப்சல் கான், பாசில் ஹமீத், கார்த்திக் மெய்யப்பன், ஃபஹத் நவாஸ், அகமது ராசா, ஜுனைத் சித்திக், ஜாகூர் கான்