#T20 World Cup 2022: தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி! வங்கதேச அணி 101 ரன்களில் ஆல்அவுட்.!
டி-20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரூஸோவ் மற்றும் டி காக் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 20 ஒவர்களில் 205 ரன்கள் குவித்தது. ரூஸோவ் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் மற்றும் தன்னுடைய முதல் சதத்தை இன்று அடித்தார். அதிகபட்சமாக ரூஸோவ் 109 ரன்கள் குவித்தார். வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
206 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பத்தில் ஓரளவு நிலைத்து ஆடினாலும் அதன் பின்னர் விக்கெட்கள் மளமளவென சரிந்தது. அந்த அணி 101 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்துவீசி நோர்ட்ஜெ 4 விக்கெட்களும் மற்றும் ஷம்ஸி 3 விக்கெட்களும் எடுத்தனர். இதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.