#T20 World Cup 2022: ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து நிகழ்த்திய சாதனைகள்.!
ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12இன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதியது. இதில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று பல சாதனைகளை படைத்துள்ளது.
நியூசிலாந்து அணி 200 ரன்கள்: முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி, டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக 200 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளது.
முதல் ஓவர் 14 ரன்கள்: டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் ஒவரில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.
கான்வே 92*: கான்வே இந்த போட்டியில் 92* ரன்களெடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்த டி-20 உலகக்கோப்பை 2022இன் அதிகபட்ச ஸ்கோரை கான்வே அடித்தார்.
மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்துள்ளது. இதன்மூலம் விராட் கோலியின்(90 ரன்கள்) சாதனையை கான்வே உடைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 2016இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவில் 90 ரன்கள் அடித்ததுவே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய வெற்றி: இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே நியூசிலாந்தின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து பெறும் முதல்வெற்றியாகும்.