டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் இன்று தொடங்கியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடி காட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 92 ரன்களும், பின் ஆலன் 42 ரன்களும் எடுத்தனர். டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியின் முதல் 200 ரன்கள் ஸ்கோர் இதுவாகும்.
201 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை, வந்த வேகத்தில் மூட்டையைக் கட்டினர். ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியுற்றது.
நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னர் மற்றும் டிம் சௌதி தலா 3 விக்கெட்களும், ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெவான் கான்வே, ஆட நாயகன் விருது பெற்றார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…