#T20 World Cup 2022: சூப்பர்-12இன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரம்.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் இன்று தொடங்கியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடி காட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 92 ரன்களும், பின் ஆலன் 42 ரன்களும் எடுத்தனர். டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியின் முதல் 200 ரன்கள் ஸ்கோர் இதுவாகும்.

201 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை, வந்த வேகத்தில் மூட்டையைக் கட்டினர். ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியுற்றது.

நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னர் மற்றும் டிம் சௌதி தலா 3 விக்கெட்களும்,   ட்ரெண்ட் போல்ட்   2 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெவான் கான்வே, ஆட நாயகன் விருது பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth