டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இலங்கைக்கு மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிர மற்ற எந்த வீரரும் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை.
சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், 104 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி அடுத்து களமிறங்கியது.
இலங்கை அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அனைவரும் வந்த வேகத்தில் கிளம்பினர். அதிகபட்சமாக கேப்டன் தாசுன் சனாகா 35 ரன்களும், பனுகா ராஜபக்சா 34 ரன்களும் எடுத்தனர், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்குடனும் டக் அவுட்டும் ஆகினர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…