#T20 WorldCup 2022: அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன்(61), பின் ஆலன்(32) ரன்கள் குவித்தனர். அயர்லாந்து அணியில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் உட்பட 3 விக்கெட் வீழ்த்தினார்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால் ஸ்டிர்லிங்(37) மற்றும் பால்பிரின்(30) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே அடித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்களும், இஷ் சொதி, டிம் சௌதி மற்றும் மிட்சேல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை ப்ரகாசப்படுத்தி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi