டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 குவித்தது.
அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப, வில்லியம்சன்- பிலிப்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. வில்லியம்சன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிலிப்ஸ் 62 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினார். முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…