#T20 World Cup 2022: கொரோனா இருந்தாலும் பரவால்ல! உலகக்கோப்பையில் அனுமதிக்கும் ஐசிசி.!
கொரோனா சோதனையில் தொற்று உறுதியானாலும், டி-20 உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தோற்று ஏற்பட்ட காரணத்தால் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த இந்த டி-20 உலககோப்பைத்தொடர் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள இந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐசிசி தற்போது கொரோனா குறித்து ஒரு முடிவை அறிவித்துள்ளது.
டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் வீரர்களுக்கு கொரோனா சோதனையில் தொற்று உறுதி என வந்தாலும் அவர்கள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் வீரர்களுக்கு தொடரின் இடையில் எந்தவித கொரோனா சோதனையும் எடுப்பதற்கு கட்டாயப்படுத்த மாட்டாது என்றும், வீரருக்கு கோவிட்-19 உறுதியானால் அவரைத் தனிமைப்படுத்தும் காலம் இருக்காது என்றும் தெரிவித்தது. மருத்துவர்கள் வீரரின் உடல்நிலையை மதிப்பிட்டு கூறும் அறிவுரையின் படியே வீரர் தொடர்ந்து விளையாடுவார் என்று ஐசிசி அறிவித்தது.