#T20 World Cup 2022: ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு.!

Published by
Muthu Kumar

டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது, இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்திருக்கிறது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 40 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து, இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 158 ரன்கள் வெற்றி இலக்காக இலங்கை அணி, நிர்ணயித்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

4 minutes ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

47 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

1 hour ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

3 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

3 hours ago