#T20 World Cup 2022: அல்சாரி ஜோசப் அசத்தல் பௌலிங், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றி.!
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய எட்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
இதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, சார்லஸ் 45 ரன்களும், கடைசி நேரத்தில் பவல் அணிக்கு தேவையான 28 ரன்களும் அடித்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்களை சாய்த்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பதிவு செய்துள்ளது.