#T20 World Cup 2022: டி-20 உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர் ரோஹிர் சர்மா.!

Default Image

டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர்களில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்துள்ளார். இந்த 3 சிக்ஸர்கள் மூலம் ரோஹித், டி-20 உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக 34 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் டி-20 உலகக்கோப்பையில் இந்தியர்களில் அதிக சிக்ஸர் அடித்த யுவராஜின் (33 சிக்ஸர்) சாதனையை முறியடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்