#T20 World Cup 2022: டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பௌலிங்.!
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்று அயர்லாந்து அணி பௌலிங் தேர்வு செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் நான்காவது தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில் அணி ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டதால் அடுத்த போட்டிக்கான டாஸ் போடும் நேரம் தாமதமானது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
ஜிம்பாப்வே அணி: ரெஜிஸ் சகாப்வா (W), கிரேக் எர்வின் (C), வெஸ்லி மாதேவேரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்காரவா, ஆசிர்வாதம் முசரபானி
அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (C), பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர் (W), ஹாரி டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, மார்க் அடேர், சிமி சிங், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்