#T20 World Cup 2022: கடைசி வரை போராடிய நமீபியா, யுஏஇ அணிக்கு ஆறுதல் வெற்றி!
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 10 ஆவது போட்டியில் யுஏஇ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில், நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் 10 ஆவது தகுதி சுற்று போட்டியில் விளையாடிய யுஏஇ மற்றும் நமீபியா அணிகளுக்கிடையேயான போட்டியில் யுஏஇ அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஹம்மது வாசிம் 50 ரன்களும், ரிஸ்வான் 43 ரன்களும் குவித்தனர்.
149 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, யுஏஇ அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்களை இழந்து வந்தது. டேவிட் விஸ் கடைசி வரை நமீபியாவின் வெற்றிக்கு போராடி அரைசதமடித்தார். இறுதியில் நமீபியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் மட்டுமே அடித்தது. யுஏஇ அணி தரப்பில் பாசில் ஹமீது, ஜாகூர் கான் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
இதனால் யுஏஇ அணி, 7 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று நமீபியாவின் சூப்பர்-12 வாய்ப்பை தட்டிப்பறித்தது. முஹம்மது வாசிம், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் அடிப்படியில் தற்போது குரூப் A வில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12க்கு முன்னேறுகின்றன. குரூப் B இல் இன்னும் இரண்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. நாளையோடு தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைவதால், அதன் முடிவில் இன்னும் இரண்டு அணிகள் சூப்பர்-12 க்கு தகுதி பெறும்.