#T20 World Cup 2021: டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!

Default Image

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. நேற்று இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23ம் தேதி நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி வீரர்கள் : ஈயின் மோர்கன், மொயீன் அலி, ஜொனாதன் பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

காத்திருப்பு வீரர்கள்: டாம் கரன், லியாம் டாசன், ஜேம்ஸ் வின்ஸ்.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை 2021 தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டது.

பங்களாதேஷ் அணி வீரர்கள்: மஹ்மூத் உல்லா (கேப்டன்), நைம் ஷேக், சவுமியா சர்கார், லிட்டன் குமர் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், நசும் அகமது, முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஷைஃப் உத்தீன், ஷாம் உத்தீம் ஹொசைன்.

காத்திருப்பு வீரர்கள்: ரூபெல் ஹொசைன், அமினுல் இஸ்லாம் பிப்லாப்.

அக்டோபர் 18-ஆம் தேதி ஸ்காட்லாந்துக்கு எதிராக போட்டியில் பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்