#T20WorldCup2021:கப்டில் காட்டடி – ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நியூசிலாந்து அணி20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.இதனால்,ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்டில் மற்றும் டேரில் மிட்செல் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்த நிலையில்,டேரில் 13 ரன்களில் எல்பிடபுள்யு ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் டக் அவுட் ஆன நிலையில்,அதன்பின்னர் இறங்கிய கான்வே 1 ரன்னில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அவர்களை தொடர்ந்து,களம் கண்ட க்ளென் பிலிப்ஸ் நிதானமாக விளையாடி அணிக்கு மேலும் ரன்களை சேர்த்தார்.ஆனால்,33 ரன்கள் எடுத்த நிலையில் 18 வது வரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.6 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடித்து அதிரடியாக விளையாடி 93 ரன்கள் எடுத்த கப்டிலும் 18 வது ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில்,20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.நீஷம் 10* ரன்கள்,சான்ட்னர் 2* ரன்கள்.
ஸ்காட்லாந்து அணியைப் பொறுத்தவரை சஃப்யான் ஷெரீஃப்,வீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025