T20 World Cup 2021:பேட்டிங்கில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கு!

Default Image

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.அதன்படி,அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய்,முகமது ஷாஜாத் ஆகியோர் வந்த வேகத்திலேயே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதனையடுத்து,குர்பாஸ்,குல்பாடின் ஆகியோர் இறங்கினர்.ஆனால்,6 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபுள்யு ஆகி குர்பாஸ் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து,குல்பாடினும் இஷ் சோதியின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர்,நஜிபுல்லா மற்றும் கேப்டன் நபி ஆகியோர் களம் கண்டனர்.அதிரடியாக விளையாடி நஜிபுல்லா அணியின் ரன்களை உயர்த்தினார்.ஆனால்,கேப்டன் நபி 14 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தொடர்ந்து,சிறப்பாக விளையாடி வந்த நஜிபுல்லா 73 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.அவர் அடித்த ரன்களே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.

இதனையடுத்து,களமிறங்கிய கரீம் ஜனத்,ரஷித் கானும் ஒற்றைப்படை ரன்களில் விக்கெட்டை இழக்க,20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்