T20: தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டம் 95 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!

Published by
murugan

இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  முதல்  டி -20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து  உள்ளது.

Image

 

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய  இரண்டாவது பந்திலேயே ஜான் காம்ப்பெல் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர் நிக்கோலஸ் பூரன் களமிங்கிறனார்.மூன்றாவது ஓவரில் எவின் லூயிஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.தொடக்க வீரர்கள் இருவருமே ரன்கள் எடுக்காமல் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாப நிலையில் இருந்தது.

பிறகு இறங்கிய கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் இருவரும் கைகோர்த்து அணியின்   எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.நிதானமாக விளையாடி வந்த நிக்கோலஸ் 20 ரன்னில்   வெளியேறினார்.

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை  இழந்து  95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் புவனேஷ்குமார் 2 விக்கெட்டையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Published by
murugan

Recent Posts

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

11 minutes ago

NDA கூட்டணியில் பாமக இருக்கா.? இல்லையா.? அன்புமணி பதில் என்ன?

சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…

31 minutes ago

இந்தியாவுக்கு ஆடியபோது கிடைக்கல ஆனா ஆர்சிபிகாக கிடைச்சது! ஜிதேஷ் சர்மா எமோஷனல்!

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…

1 hour ago

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

2 hours ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

3 hours ago