T20: தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டம் 95 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி -20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே ஜான் காம்ப்பெல் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர் நிக்கோலஸ் பூரன் களமிங்கிறனார்.மூன்றாவது ஓவரில் எவின் லூயிஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.தொடக்க வீரர்கள் இருவருமே ரன்கள் எடுக்காமல் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாப நிலையில் இருந்தது.
பிறகு இறங்கிய கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.நிதானமாக விளையாடி வந்த நிக்கோலஸ் 20 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் புவனேஷ்குமார் 2 விக்கெட்டையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.