டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று அடிலெய்டில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நெதெர்லாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
20 வர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 40 ரன்களும், சான் வில்லியம்ஸ் 28 ரன்களும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் பால் மீகெரென் 3 விக்கெட்களும், பிராண்டன் க்ளோவர், லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
118 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓ டௌட்(52 ரன்கள்) மற்றும் டாம் கூப்பர்(32 ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். 18 ஓவர்களில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஜிம்பாப்வே சார்பில் முசரபானி மற்றும் ரிச்சர்ட் ங்கரவா தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.
நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. ஆட்ட நாயகனாக மேக்ஸ் ஓ டௌட், தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…