முதல் முறையாக டி20 தொடர் :
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் 2024 ஜனவரியில் நடைபெறயுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜனவரி 14-ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 17-ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்திலும் நடைபெறும். இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
ஐசிசி உலகக்கோப்பையை போட்டிகள் மற்றும் ஆசிய உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் இரு அணிகளுக்கு மோதி வந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு இரு அணிகளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான்:
2023 உலகக் கோப்பையில் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியின் தலைமையில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறும் நிலைக்கு மிக அருகில் வந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு செல்லும் ஆப்கானிஸ்தான் கனவு நிறைவேறவில்லை.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…