இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. கேன் வில்லியம்சன் விலகல்.! புதிய கேப்டன் அறிவிப்பு.!
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட மருத்துவ சந்திப்பிற்காக வில்லியம்சன் செல்லவுள்ளதால் அவர் 3 ஆவது டி-20 போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டிம் சௌதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், முன் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ சந்திப்பிற்கு கேன் செல்கிறார், இதற்கும் சிறிது காலமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த முழங்கை காயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால் வில்லியம்சன் 25 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்றும் வில்லியாம்சனுக்கு பதிலாக டி-20 அணியில் மார்க் சாப்மன் இணைவார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்தது.