இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மேத்யூ வேட் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளது இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து 0வங்கதேசம் ஆகிய இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த லீக் போட்டிகள் முடிந்த முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு அரையிறுதி போட்டி நடைபெறும். பின்னர் வெற்றி பெரும் அணி நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.எஸ் சர்ச்சை… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! விதியை மாற்ற ஹர்பஜன் சிங் கோரிக்கை!
அதாவது, இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நவ. 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ODI உலகக் கோப்பை அணியில் இருக்கும் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் உட்பட 8 பேர் இந்தியாவுக்கு எதிரான டி201 அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா டி20 அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ் டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
SQUAD! There’s more cricket to come in India next month, with Matthew Wade set to lead this talented bunch in five T20I’s against India #INDvAUS pic.twitter.com/Mqc8cLe5Ur
— Cricket Australia (@CricketAus) October 28, 2023