இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக லூயிஸ் , சுனில் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே லூயிஸ் 10 , சுனில் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
பிறகு இறங்கிய ஹெட்மேயர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பரிதாபமான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை பொல்லார்ட் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 58 ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பின்னர் இறங்கிய பூரன் 17 , ப்ரத்வேய்ட் 10 , ரோவ்மன் பவல் 32 ரன்களுடன் நடையை கட்டினார்கள். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்டுகள் ,சைனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் ஷிகர் தவான் 3 ரன்னுடன் வெளியேற பிறகு விராட் கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 20 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் விராட் கோலி , ரிஷாப் பந்த் இருவரும் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் நிறைவு செய்தனர். பின்னர் கோலி 59 ரன்னில் அவுட் ஆனார். தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய ரிஷாப் பந்த் கடைசி இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
ஆனால் இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ரிஷாப் பந்த் 65 ரன்களுடன் நின்றார். இறுதியாக இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிலும் வெற்றி பெற்று உள்ளது.இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.நாளை இந்த இரு அணிகளுக்கும் முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…