T20 INDvsWI : முதல் போட்டியிலே வெற்றியை பதித்த இந்தியஅணி !

Published by
murugan

இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  முதல்  டி -20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய  இரண்டாவது பந்திலேயே ஜான் காம்ப்பெல் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.

Image

பின்னர் நிக்கோலஸ் பூரன் களமிங்கிறனார்.மூன்றாவது ஓவரில் எவின் லூயிஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.தொடக்க வீரர்கள் இருவருமே ரன்கள் எடுக்காமல் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாப நிலையில் இருந்தது.

பிறகு இறங்கிய கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் இருவரும் கைகோர்த்து அணியின்   எண்ணிக்கையை சற்று உயர்த்தினர் இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை  இழந்து  95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் புவனேஷ்குமார் 2 விக்கெட்டையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

96 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் தொடக்கத்திலே ஷிகர் தவான் 1 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் இறங்கிய விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி ,ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை  சற்று உயர்த்தினார்.நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 24 ரன்னில் அவுட் ஆனார்.

பிறகு இறங்கிய ரிஷாப் பந்த்  ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். பின் அடுத்தது இறங்கிய கிருனல் பாண்ட்யா 12 , மணீஷ் பாண்டே 19 ரன்னில் அவுட் ஆக இறுதியாக இந்திய அணி 17.2  ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி  வெற்றி பெற்றது.

Published by
murugan

Recent Posts

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

24 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

1 hour ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

2 hours ago

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

2 hours ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

3 hours ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

4 hours ago