இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஷிகர் தவான் இருவரும் களம் இறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 23 ரன்களில் வெளியேறினார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் நிறைவு செய்து 67 ரன்னில் அவுட் ஆனார். பிறகு கோலி 28 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து இறங்கிய ரிஷாப் பந்த் 4 , மனீஷ் பாண்டே 6 என சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ் ,ஷெல்டன் கோட்ரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…