முதல் போட்டியில், பவர்பிளே ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய “யாக்கர் மன்னன்” குவியும் பாராட்டுக்கள்!

தமிழக வீரரான நடராஜன், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார். அவருக்கு பலரும் சமூகவலைத்தளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் இந்திய அணி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, 302 ரன்கள் அடித்தது.
303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தனது முதல் ஒருநாள் தொடரை விளையாடும் நடராஜன், தான் பங்கேற்ற முதல் போட்டியிலே பவர்பிளே ஓவரான 5 ஆம் ஓவரை மெய்டனாக்கி, தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், கடைசியாக நடந்து முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில், அதிலும் முதல் விக்கெட் எடுத்து இந்திய அணிக்காக பெருமை சேர்த்துள்ளார். நடராஜன், தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதன் காரணமாக சமூகவலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
Maiden and his maiden wicket ????
We won Maara !! #INDvAUS #Nattu pic.twitter.com/GpqkZfStOx— KARTHI DHONI (@KarthiMsdian) December 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025