இந்திய அணியில் இடம்பிடித்த யார்க்கர் மன்னன் நடராஜன் ! வருண் வெளியே ..
இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழக வீரர் நடராஜன்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வரும் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் தங்கராசு நடராஜன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார்.குறிப்பாக இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் யார்கர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறி வருகின்றனர்.நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 16போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழக வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி-20 அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார் . காயத்தால் விலகியுள்ள சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்குப் பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.