பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலக்காவுக்கு, சிட்னி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்.!

Default Image

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலக்காவுக்கு சிட்னி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பைக்காக அங்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட்டர் தனுஷ்கா குணாதிலகா, நவம்பர் 6ஆம் தேதி தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கையின் இறுதி சூப்பர் 12 நிலைப் போட்டி தோல்விக்கு அடுத்தநாள் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இந்த சம்பவத்தை தொடர்ந்து சிட்னி போலீசார் அவரை கைது செய்தனர்.

குணதிலகா, டேட்டிங் செயலியில் ஒரு பெண்ணுடன் பேசிப்பழகியுள்ளார். அதன்பின் அவர்கள் இருவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதற்கு முன்னதாக இருவரும் மது அருந்தியிருந்தனர். அந்த பெண்ணின் வீட்டில் குணாதிலகா, அந்த பெண்ணை அவர் அனுமதியின்றி பலவந்தமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மறுநாள் காலையில் உதடுகளில் புண் மற்றும் வீக்கத்துடன் எழுந்த அந்தப் பெண், இரண்டு நண்பர்களை அழைத்து நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியதாக போலீஸார் கூறுகின்றனர். மேலும் அந்த பெண் ஒரு மருத்துவரை அணுகியுள்ளார்.  தன்னால் “அழுகையை நிறுத்த முடியவில்லை” என்பதால் தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குணதிலகா அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 11 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின் நண்பரின் உதவியுடன் $200,000 வழங்கி, உத்தரவாதத்தின் ஆதரவுடன் விடுதலைக்கான கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த நிலையில் தற்போது சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றம் குணதிலகாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது, நிபந்தனைகளின் கீழ், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் தற்போதுள்ள சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் செயலிகளை பயன்படுத்தக்கூடாது, குணதிலகாவின் பாஸ்போர்ட் தற்போது முடக்கப்பட்டுள்ளது, மறு அறிவிப்பு வரும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்