வரும் போட்டிகளில் திரும்பி வலுவாக வருவோம் அப்போது எங்கள் வெற்றியை தடுக்க முடியாது என்று சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 17.4 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து புள்ளிபட்டியலில் பஞ்சாப் 5-ம் இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் பேசிய மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் கூறியது ” இதற்கு முன்பு நாங்கள் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டோம், வரும் போட்டிகளில் மிகவும் வலுவாக திரும்பி வருவோம், அப்போது எங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது நங்கள் அடுத்த வரும் 4 போட்டியில் டெல்லியில் விளையாடவுள்ளோம். ஒரு கட்டம் முற்றிலும் முடிந்துவிட்டது இது அடுத்த கட்டத்திற்கான நேரம், வரும் போட்டிகளில் அணிக்காக நான் எனது 100 சதவிகிதம் உழைப்பை கொடுத்து உறுதியாக இருப்பேன். நாங்கள் அடுத்த கட்டத்தை மிகவும் வலுவாக ஆரம்பித்து மீண்டும் மிகவும் கடினமான ஒரு அணியாக போட்டிக்கு வருவோம்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…