“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும் சென்னை -மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மும்பை அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆச்சு?
மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மெதுவான ஓவர் விதத்தை கடைபிடித்த காரணத்தால் இந்த ஆண்டு ஒரு போட்டியில் விளையாட பிசிசிஐ தடைவிதித்துள்ளது. எனவே, முதல் போட்டியில் யார் மும்பை அணியை வழிநடத்தப்போகிறார் என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என ஹர்திக் பாண்டியாவே அறிவித்துள்ளார்.
இது குறித்து பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா ” நான் இல்லாதபோது அணியை வழிநடத்த சிறந்த ஒரு தேர்வாக இருப்பவர் யார் என்றால் சூரியகுமார் யாதவ் என்று சொல்வேன். அவரை கேப்டனாக தேர்வு செய்தால் தான் சரியாக இருக்கும்” என பாண்டியா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” ரோஹித், சூரியகுமார் யாதவ், பும்ரா போன்ற கேப்டன்களுடன் விளையாடுவதை நான் என்னுடைய அதிர்ஷ்ட்டமாக பார்க்கிறேன். அவர்களுடன் விளையாடும் போது நான் பல விஷயங்களை கற்றுக்கொள்வேன். தேவையான நேரத்தில் என்னுடைய தோல் மீது கைவைத்து தேவையான விஷயங்களை சொல்லிக்கொடுப்பார்கள். எனவே, நான் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்” எனவும் பாண்டியா தெரிவித்தார்.
மேலும், சூரியகுமார் யாதவ் சிறப்பான டி20 ஆட்டக்காரராக மட்டுமின்றி கேப்டனாகவும் இருந்திருக்கிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 46 ஆட்டங்களில் அவர் கேப்டனாக இருந்திருக்கிறார். அவருடைய தலைமையில் அணி 30 வெற்றிகளையும் 12 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே, கேப்டனாகவும் அவருக்கு அனுபவம் இருக்கும் காரணத்தால் அவருக்கு மும்பை நிர்வாகம் இந்த பொறுப்பை வழங்கியிருப்பதாக தெரிகிறது.