ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் விளையாடவேண்டும் – தினேஷ் சண்டிமால்
இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், இடம்பெற வேண்டும், அவரை எதிர்கொள்வது சவாலானது என்று சண்டிமால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சூர்யகுமார் யாதவ், டி-20 போட்டிகளில் எதிரணியை கலங்கடித்து வருகிறார், இந்தியாவின் 360 டிகிரி வீர்ர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் ஒருநாள் அணியிலும் சூர்யகுமார் இடம்பெறவேண்டும் என முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் கூறியுள்ளார்.
சூர்யகுமார் நடுவரிசையில் இறங்கி 30-50 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர், இதில் சூர்யகுமார் யாதவ், மற்ற வீரர்களைக் காட்டிலும் சற்று வேறுபட்டவர். ஒருநாள் போட்டிகளில் அவர் வேகமாக ரன்கள் அடிக்கும்போது, அது எதிரணிக்கு சவாலானது, மேலும் விரக்தியை ஏற்படுத்தும், என தினேஷ் சண்டிமால் தெரிவித்துள்ளார்.