தொடக்க வீரராக இல்லாமல் அதிவேக சதத்தை அடித்து, சூர்யகுமார் யாதவ் சாதனை.!
சூர்யகுமார் யாதவ், தொடக்க வீரராக இல்லாமல் குறைந்த(45) பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று, ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியில், சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்துடன் இந்திய அணி 20 ஒவர்களில் 228/5 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம், இந்தியாவிற்காக தொடக்க வீரராக களமிறங்காமல், நடுவரிசையில் இறங்கி சூர்யகுமார், குறைந்த பந்துகளில் சதமடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்தியாவின் கேஎல் ராகுல் 46 பந்துகளில் சதமடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது, தற்போது அந்த சாதனையை 45 பந்துகளில் அடித்து சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.