இந்தியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆனது நேற்று க்கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனையடுத்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஜோடி களமிறங்கியது.
இருவரும் இணைந்து சிறப்பாக விளையாட திலக் வர்மா 29 ரன்களில் வெளியேறினார். இதன்பின் ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து தென்னாப்பிரிக்காவின் பந்துகளை பதம் பார்த்தனர். இதில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டி20 ஆட்டத்தில் அரைசதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார். 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார். அதேபோல, டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைவான பந்துகளில் (1164 பந்துகள்) 2000 ரன்களை மிக வேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
இந்த சாதனையை சூர்யகுமார் 56 இன்னிங்ஸில் படைத்துள்ளார். இதனால் 56 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். முன்னதாக, டி20 போட்டிகளில் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை எட்டி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சர்வதேச சாதனை படைத்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…