ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அணியின் கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் எந்தளவுக்கு வெற்றி பெறுவார் என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அதே நேரத்தில் பேட்டிங்கில் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனையை முறியடிக்க சூர்யாவுக்கு இந்த டி20 தொடர் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் 5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 159 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்கமுடியும்.
சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்:
இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் 159 ரன்கள் எடுத்தால் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்வார். அப்படிஇல்லையென்றால் 5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 159 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடக்க விராட் கோலி 56 போட்டிகளில் விளையாடியுள்ளார். 33 வயதான சூர்யகுமார் யாதவ் 50 போட்டிகளில் விளையாடி 1841 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…