விராட்கோலியின் டி20 சாதனையை முறியடிப்பாரா- சூர்யகுமார் யாதவ்..!

suryakumar yadav ,virat kohli

ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அணியின் கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் எந்தளவுக்கு வெற்றி பெறுவார் என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதே நேரத்தில் பேட்டிங்கில் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனையை முறியடிக்க சூர்யாவுக்கு இந்த டி20 தொடர் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் 5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 159 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்கமுடியும்.

சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்:

இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் 159 ரன்கள் எடுத்தால் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர்  சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்வார். அப்படிஇல்லையென்றால்  5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 159 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடக்க விராட் கோலி 56 போட்டிகளில் விளையாடியுள்ளார். ​​33 வயதான சூர்யகுமார் யாதவ் 50 போட்டிகளில் விளையாடி 1841 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்