இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளதாக பொல்லார்ட் கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது அதிகபட்சமாக படிக்கல் 74 ரன்கள் அடித்தார்.
அடுத்ததாக 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடினார். எங்கள் அணியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அணியை கொண்டு சென்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால் அவருக்கான வெகுமதி கண்டிப்பாக கிடைக்கும். இந்திய அணியில் அவரை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…